Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்

The lyrics below are from the sound track “Jaya Vande Matharam” from the Tamil film Bharathi.

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்தருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்

வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
எப்பதம் வாய்திடும் மேலும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்த ருவந்தே சொல்வது
வந்தே மாதரம்

ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்

சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்

தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்

ஓ! வந்தே மாதரம்!

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்

One thought on “Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.