The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
Thank u
excellent song, my dear friends please here the song atleast once.
Nice I will like to lyrics
Thanks for your wonderful efforts. Please correct the following ‘எனக்கொறு வரம்’ , ‘நெற்றிப் பிரைக்குள்’.
Thank you Rajavel. I have made the corrections.
Excellent, first time I am hearing your singing voice, really very good
மனதைப் பிழியும் பாரதியின் அற்புதப் பாடல்.
its written by a aethist Pulamai pithan
Music lovers, hear it all the time and more than twice when you are upset and depressed. This song, voice & music will set right you..
@Rajavel – Neenga mention pannirukira remdumey correct thaan in the above lyrics….
எனக்கொரு வரம் ,
நெற்றிப் பிறைக்குள்
Thank you so much for the lyrics.