Lyrics to Ethanai Periya Manithannku – எத்தனை பெரிய மனிதனுக்கு

திரைப்படம்: ஆசை முகம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1965

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார்
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

Lyrics to Buddhan Yesu Gandhi Piranthathu – புத்தன் ஏசு காந்தி பிறந்தது

படம்: சந்திரோதயம்
ஆக்கம்: வாலி

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமலங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம் இறைவனும் தந்ததில்லை

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக